என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மசாஜ் சென்டர்
நீங்கள் தேடியது "மசாஜ் சென்டர்"
மசாஜ் சென்டருக்குள் புகுந்து பெண்களிடம் கத்தி முனையில் நகை பறித்த கும்பலில் ஒருவன் சிக்கினான். தப்பி ஓடிய 4 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சாலிகிராமம், ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் “அரோமா பியூட்டி பார்லர்” என்கிற பெயரில் மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு 3 பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று மதியம் மசாஜ் சென்டருக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் 3 பெண் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 செல்போன்கள், 2 பவுன் செயின், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 5 பேர் கும்பலை துரத்திச் சென்றனர். அதில் ஒருவனை மட்டும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து மசாஜ் சென்டர் மேலாளர் கார்த்திக், விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கோமதி பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அவன், எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பது தெரிய வந்தது.
தப்பி சென்ற கூட்டாளிகள் 4 பேர் குறித்து ஆற்காடு சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளசரவாக்கம் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை மீட்ட போலீசார் மசாஜ் சென்டர் மேலாளரை கைது செய்தனர்.
போரூர்:
வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்கள் என்கிற பெயரில் வெளி மாநில பெண்களை வைத்து சிலர் விபச்சாரம் நடத்தி வருவதாக தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தனுக்கு புகார்கள் வந்தன.
அவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் முதல் தளத்தில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு அறையில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
உடனடியாக மசாஜ் சென்டர் மேலாளர் ஜெயந்தி(42) என்பவரை கைது செய்தனர். இவர் வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர்.
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சென்னை, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்த அழகிகள் 5 பேரையும் மீட்டு மயிலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். தலைமறைவான மசாஜ் சென்டர் உரிமையாளர் தமிழ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை அழைத்து மசாஜ் என்கிற பெயரில் நூதன முறையில் விபசாரம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மசாஜ் சென்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீசார் சோதனை நடத்தலாம் என்ற வரையறை செய்து தமிழக டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?’ என்று ஐகோர்ட் கேள்வியெழுப்பியுள்ளது.
சென்னை:
கோவையை சேர்ந்தவர் புஷ்பா. இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கோவையில், ‘ஸ்பா’ என்ற மசாஜ் சென்டர் நடத்தி வருகிறேன். இங்கு, கேரளாவின் பாரம்பரியமான ஆயுர்வேத சிகிச்சை அடிப்படையில் உடலுக்கு மசாஜ் செய்யப்படுகிறது. இதனால், உடலில் உள்ள பல நோய்கள் குணமடைகின்றன.
ரத்த நாளங்கள் சரியாகி, ரத்த ஓட்டம் சீராகுகிறது. ஆனால், தேவையில்லாமல் போலீசார் இதுபோன்ற பாரம்பரியமான மசாஜ் சென்டரில் சோதனை நடத்துகின்றனர். 2014-ம் ஆண்டு மசாஜ் சென்டரில் தேவையில்லாமல், அடிப்படை முகாந்திரம் இல்லாமல், சோதனை நடத்தக்கூடாது என்று அப்போதைய ஐகோர்ட்டு நீதிபதி வி.ராம சுப்பிரமணியம் தீர்ப்பு அளித்தார்.
எனவே, தேவையில்லாமல் மசாஜ் தொழிலில் தலையிடக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். பின்னர் நீதிபதி, ‘ஐகோர்ட்டு ஏற்கனவே 2 முறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில், மசாஜ் சென்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீசார் சோதனை நடத்தலாம் என்ற வரையறை செய்து தமிழக டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக சிறப்பு அரசு பிளீடர் ஏ.பாலமுருகன் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டதையடுத்து உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் ஆயுர்வேத வெல் சென்டர் என்ற பெயரில் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் இந்த மசாஜ் சென்டர் தொடங்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம் திட்டாவை சேர்ந்த நவீன் (30) இதனை நடத்தி வந்தார். இங்கு ஊழியர்களாக கோட்டயத்தை சேர்ந்த சம்பத், திருச்சூர் ஜினேஷ், எர்ணாகுளம் ஷனு ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் இங்கு விபசாரம் நடப்பதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசுக்கு புகார் வந்தது.
இதை தொடர்ந்து டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி, இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் இந்த மசாஜ் சென்டரை கண்காணித்தனர். அப்போது அங்கு விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் நவீன், ஊழியர்கள் சம்பத், ஜினேஷ், ஷனு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மற்றும் பெங்களூரை சேர்ந்த 2 இளம்பெண்கள் அங்கு இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கோவை சங்கனூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

×

X